திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
பெரம்பலூர்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சாத்தனூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலும், 5-ந் தேதி பூவெடுத்தல் நாடகமும், 6-ந் தேதி கிருஷ்ணன் தூது மண்டகப்படியும், 7-ந் தேதி அரவான் களபலியும், 8-ந் தேதி சண்டைக் காட்சியும், 9-ந் தேதி மாடு பிடித்தல் சண்டை காட்சியும், 10-ந் தேதி கர்ண மோட்சமும் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், குறவஞ்சி நாடகமும், நாளை(புதன்கிழமை) வீரபத்திரர் பூஜையும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story