வயிற்றுப்போக்கு விழிப்புணர்வு முகாம்
நீடாமங்கலம் அருகே பழங்களத்தூரில் வயிற்றுப்போக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வட்டாரம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பழங்களத்தூர் கிராமத்தில் தீவிர வயிற்றுப்போக்கு இருவார கால விழிப்புணர்வு முகாம் வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி தலைமையில், அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தையல்நாயகி முன்னிலையில் நடந்தது. இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினர். மேலும் ஜூன் மாதம் முழுவதும் மலேரியா எதிர்ப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. ஆகவே மலேரியா நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. முகாமுக்கான ஏற்பாட்டினை கிராம சுகாதார செவிலியர் கவிதா செய்திருந்தார்.
Related Tags :
Next Story