திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் தேங்கிநிற்கும் கழிவுநீர்


திருப்பூர்-ஊத்துக்குளி  சாலையில் தேங்கிநிற்கும் கழிவுநீர்
x

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் தேங்கிநிற்கும் கழிவுநீர்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் சீரமைப்புப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கிநிற்கிறது.

ஊத்துக்குளி சாலை

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். ஆனால் இந்த சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும்,குழியுமாக இருந்தது. மேலும் மழைக்காலங்களில் குழிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை சீரமைக்கக்கோரி வலியுறுத்தினர். மக்கள் கோரிக்கையை ஏற்று தற்போது சாலை சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது. சீரமைப்புப்பணியின் ஒரு பகுதியாக ஒற்றைக்கண் பாலம் அருகே சாலையோரங்களில் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெறுகிறது. இதனால் ஏற்கனவே இருந்த பழைய கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

தேங்கிநிற்கும் கழிவுநீர்

கால்வாய் அடைப்பால் ஊத்துக்குளி சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே மழைக்காலங்களில் ஒற்றைக்கண் பாலத்திலும், ஊத்துக்குளி சாலையிலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கிநிற்கும். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது தேங்கியுள்ள கழிவுநீர் சாலையில் செல்லும் இருவாகன ஓட்டிகள் மீது படுகிறது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சாலை சீரமைப்புப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story