பிரதம மந்திரி நிதி உதவி கிடைக்கவில்லையா?


பிரதம மந்திரி நிதி உதவி கிடைக்கவில்லையா?
x

பிரதம மந்திரி நிதி உதவி கிடைக்கவில்லையா?

திருப்பூர்

போடிப்பட்டி,

விவசாயிகளுக்கான பிரதம மந்திரி நிதி உதவித் திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு இடையில் நிதி நிறுத்தப்பட்டிருந்தால் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

3 தவணைகள்

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் மத்திய அரசின் மூலம் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் என்ற வகையில் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உதவித் தொகை சென்று சேரும் வகையில் ஆதார் இணைப்பு, சொத்து விபரங்கள் பதிவு உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் இணைக்கப்படுகிறது.மேலும் பொது சேவை மையங்கள் மூலம் ஆதார் விபரங்களுடன் கைரேகை பதிவு செய்யவும் (இ-கேஒய்சி) வலியுறுத்தப்பட்டது. ஆனால் போதிய கால அவகாசம் கொடுத்தும் பல விவசாயிகள் இந்த பதிவு மேற்கொள்ளவில்லை. ஆரம்ப கட்டத்தில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இதனால் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் விபரங்களை பதிவு செய்யாத பல விவசாயிகளுக்கு நிதி உதவி நிறுத்தப்பட்டது. தற்போது வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலமாகவும் இ-கேஒய்சி பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கையில் இருக்கும்செல்போன் எண்

ஆனாலும் பல விவசாயிகள் பதிவு செய்யாததற்கு தங்கள் தொலைபேசி எண்ணை மாற்றி விட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து விவசாயிகள் நலன் கருதி கையில் வைத்திருக்கும் எண்ணைப் பயன்படுத்தி இ-கேஒய்சி பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மடத்துக்குளம் வட்டாரத்தில் சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பிரதம மந்திரி நிதி உதவித் திட்டத்தில் பயனடைந்து வந்தனர். இந்தநிலையில் உரிய ஆவணங்கள் இணைக்கும் நடைமுறைகளைப் பூர்த்தி செய்யாததால் பலருக்கு நிதி உதவி நிறுத்தப்பட்டது. குறிப்பாக இ-கேஒய்சி பதிவு செய்யாத 2250 விவசாயிகளுக்கு நிதி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வேளாண்மைத்துறையினர் தொலைபேசி மூலமும் நேரிலும் சென்று விவசாயிகளுக்கு நினைவூட்டினர். ஆனாலும் இன்னும் சுமார் 1200 விவசாயிகள் இ-கேஒய்சி பதிவு செய்யவில்லை. எனவே விடுபட்ட விவசாயிகள் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையில் வைத்திருக்கும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி இ-கேஒய்சி பதிவு செய்து கொள்ளலாம்.

இ்வ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story