வீடுகளில் பயன்படுத்தும் மசாலா தரமானவையா? எனஅறிய உங்கள் இடம் மற்றும் வீடு தேடி நடமாடும் ஆய்வகம் வருகிறது.


வீடுகளில் பயன்படுத்தும் மசாலா தரமானவையா? எனஅறிய உங்கள் இடம் மற்றும் வீடு தேடி நடமாடும் ஆய்வகம் வருகிறது.
x

வீடுகளில் பயன்படுத்தும் மசாலா தரமானவையா? எனஅறிய உங்கள் இடம் மற்றும் வீடு தேடி நடமாடும் ஆய்வகம் வருகிறது.

திருப்பூர்

திருப்பூர்

வீடுகளில் பயன்படுத்தும் மசாலா தரமானவையா? எனஅறிய உங்கள் இடம் மற்றும் வீடு தேடி நடமாடும் ஆய்வகம் வருகிறது.

நடமாடும் ஆய்வகம்

திருப்பூர் மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரத்தை உடனுக்குடன் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறையில் நடமாடும் ஆய்வகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஆய்வக வாகனத்தை கலெக்டர் வினீத், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை உடனிருந்தார். உணவுப்பொருட்களின் தரம், கலப்படம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்து அதன் முடிவுகளின் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து உடனுக்குடன் முடிவுகளை அறிந்து கொள்ள நடமாடும் ஆய்வகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் நடமாடும் ஆய்வகம் மூலம் உணவுப்பொருட்கள் கலப்படம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக சோதனை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

உடனடி பரிசோதனை

வருகிற ஜூன் மாதம் 5-ந் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வாகனத்தின் மூலமாக உணவு பரிசோதனை ஆய்வுகள் நடைபெற உள்ளது. பொது இடங்களில் மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அவர்கள் உட்கொள்ளும் துரித உணவு பொருட்களின் தன்மை, அதனால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

வீடுகளில் இல்லத்தரசிகள் வழக்கமாக பயன்படுத்தும் மசாலா பொருட்கள் தரமானவையா? என்பதையும், நிறமிகள் மற்றும் தேவையற்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் இந்த வாகனத்தின் மூலமாக அறிய முடியும். சமையலுக்கு பயன்படுத்தும் உணவு பொருட்களில் சேர்க்கப்பட்ட வேதிப்பொருட்கள் பற்றி அறியும் வழிமுறையும் தெரிவிக்கப்படும். இந்த நடமாடும் ஆய்வக வாகனம் மூலமாக பொதுமக்கள், வணிகர்கள் பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களின் தரம், உணவு உட்கொண்ட பிறகு ஏற்படும் உபாதைகள் குறித்து 94440 42322 என்ற வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தெரிவித்துள்ளார்.


Next Story