மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

ராமநாதபுரம்

தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேலபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் என்ற சுரேஷ் (வயது 31). இவர் தனது உறவினரான பாலமுருகனுடன் ராமநாதபுரம் வந்து வ.உ.சி. நகர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது கட்டிட கம்புகட்டு சாரத்தினை கீழே இருந்து மேலே தூக்கியபோது மின்வயரில் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை மற்ற தொழிலாளிகள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், லட்சுமணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story