வாழவல்லானில் மின்சாரம் தாக்கி இறந்ததொழிலாளி குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி


வாழவல்லானில் மின்சாரம் தாக்கி இறந்ததொழிலாளி குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாழவல்லானில் மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள வாழவல்லான் தெற்கு ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). கூலி தொழிலாளியான இவர் ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது வீட்டுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தாசன், யூனியன் கவுன்சிலர் பாரத் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story