மின்சாரம் பாய்ந்து பலியானமாணவனின் உடலை போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்த தந்தை மீது வழக்கு


மின்சாரம் பாய்ந்து பலியானமாணவனின் உடலை போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்த தந்தை மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே மின்சாரம் பாய்ந்து பலியான மாணவனின் உடலை போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

வருசநாடு அருகே கோரையூத்து கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் நித்திஸ் (வயது 8). இவன், அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 18-ந்தேதி தோட்டத்து வீட்டில் இருந்த நித்திஸ் டி.வி.யை ஆன் செய்வதற்காக சுவிட்சை போட முயன்றான். அப்போது டி.வி.க்கு அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த மின் வயரை அவன் எதிர்பாராத விதமாக தொட்டுவிட்டான். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின், பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவனது உடலை சுடுகாட்டில் எரித்து விட்டனர். இந்த சம்பவம் அறிந்த மேகமலை கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் கோரையூத்து கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மகேந்திரன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story