மேற்கு வங்க மாநிலத்தில் பலியான எல்லை பாதுகாப்பு படைவீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்: 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நடந்தது


மேற்கு வங்க மாநிலத்தில் பலியான  எல்லை பாதுகாப்பு படைவீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்:  21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நடந்தது
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்க மாநிலத்தில் பலியான எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நடந்தது.

தேனி

தேனி மாவட்டம் கூடலூர் ராஜீவ் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கொடியரசன். அவருடைய மகன் கவுதம் (வயது 31). இவர், மேற்கு வங்காளத்தில் பாக்டோக்ரா அருகே டாங்கி பிரா பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படைமுகாமில் சிவில் எலக்ட்ரீசியன் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 28-ந்தேதி இவர், பணியில் இருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தார். இதையடுத்து அவரது உடல் நேற்று காலை சொந்த ஊரான கூடலூருக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு எல்லை பாதுகாப்பு படை துணை சூப்பிரண்டு நெஹி தலைமையில் 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் கவுதம் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது கவுதம் உடல் மீது போா்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது தாயிடம் வழங்கப்பட்டது. எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கவுதமுக்கு, கவுசல்யா என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story