பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு கலெக்டர் மற்றும் போலீஸ்சூப்பிரண்டு ஆகி்யோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு கலெக்டர் மற்றும் போலீஸ்சூப்பிரண்டு ஆகி்யோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பணியின்போது மரணம்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி, பணியின்போது மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலிசெலுத்தும் வீரவணக்கநாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 264 போலீசார் பணியின்போது மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்தது.
கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி
இதில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் திருப்பத்தூர் கணேசன், வாணியம்பாடி சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் சரவணன், ஆயுதபடை இளவழகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் நாகேந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.