பணியின்போது இறந்தபோலீசாரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு பணி நியமன ஆணை


பணியின்போது இறந்தபோலீசாரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின்போது இறந்த போலீசாரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது இறந்த போலீசாரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்து உள்ளது. இந்த பணி நியமன ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு வழங்கினார். அப்போது, மாவட்ட போலீஸ் துறை அலுவலக அமைச்சுப்பணி உதவியாளர் கிருஷ்ணம்மாள் உடன் இருந்தார்.


Next Story