டீசல் பதுக்கியவர் கைது


டீசல் பதுக்கியவர் கைது
x

டீசல் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாம்பன்குளம் விலக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறத்தில் பாதுகாப்பற்ற முறையில் 60 லிட்டர் டீசல் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மானூர் அருகே உள்ள நெல்லை திருத்து பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் சிவனார் (வயது 40) என்பவர், லாரி டிரைவர்களிடம் இருந்து குறைந்த விலையில் டீசலை வாங்கி அதனை வெளியே விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவனாரை கைது செய்தனர்.


Next Story