டி.ஐ.ஜி. பொன்னி ஆய்வு


டி.ஐ.ஜி. பொன்னி ஆய்வு
x

அருப்புக்கோட்டை போலீஸ் நிலையங்களில் டி.ஐ.ஜி. பொன்னி ஆய்வு செய்தார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையம், பந்தல்குடி போலீஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி நேற்றுஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது போலீஸ் நிலையங்களில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு குடியிருப்பவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை பார்வையிட்டு மரக்கன்று நட்டார். இந்த ஆய்வின்போது தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story