போலீசாரின் வாகனங்களை டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு
போலீசாரின் வாகனங்களை டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 3 கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள வாகனங்களை ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆய்வு நேற்று நடைபெற்றது. இதற்காக தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. போலீஸ் வேன், ஜீப், கலவர பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படும் வாகனம், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.இதனை தஞ்சை டி.ஜ.ஜி. கயல்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் வாகனங்களின் ஆவணங்களையும் அவர் சரிபார்த்தார். இதில் போலீசாரின் கவாத்து மற்றும் உடைமைகளையும் அவர் அய்வு செய்தார். போலீசாரின் 124 இருசக்கர வாகனங்கள் மற்றும் 100 நான்கு சக்கர வாகனங்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வின் போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, தஞ்சை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், வாகனப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடன் இருந்தனர்.