மக்கள் நலத்திட்டங்கள் குறித்த டிஜிட்டல் கண்காட்சி


மக்கள் நலத்திட்டங்கள் குறித்த டிஜிட்டல் கண்காட்சி
x

மக்கள் நலத்திட்டங்கள் குறித்த டிஜிட்டல் கண்காட்சி நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் மூலம் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை குறித்து விளக்கும் டிஜிட்டல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் அரசின் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்கள் பங்கேற்றனர். கண்காட்சியில் பங்கேற்க வந்த மாணவர்களுக்கு தீயணைப்பு நிலையம் சார்பில் தீ விபத்து மற்றும் பேரிடரில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி அணைப்பது என்பது குறித்தும், பேரிடர் ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்து மாணவர்களுக்கும் செய்து காண்பித்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Next Story