'தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் முயற்சிக்க வேண்டும்'


தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் முயற்சிக்க வேண்டும்
x
திருப்பூர்


தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான முயற்சிகளை கவர்னர் மேற்கொள்ள வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

கொடிகாத்த குமரனுக்கு மரியாதை

கொடி காத்த குமரனின் நினைவு தினத்தையொட்டி இந்து மக்கள் கட்சியின் சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாநில தகவல் தொடர்பாளர் அரிகரன், இளைஞரணி செயலாளர் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைத்துள்ளார்கள். அதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கவர்னர் அவமதிக்கப்பட்டு இருப்பது குறித்து தமிழகம் முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சட்டசபையில் உரையாற்றும்போது கவர்னரை அவமதிப்பு செய்து தமிழ்நாடு சட்டசபையின் மாண்பு கெடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் செத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். கவர்னரை அவமதித்ததால் தமிழ்நாடு சட்டசபையை மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்தையே அவமதித்தது போன்றதாகும்.

கவர்னர் வெளிநடப்பு

கவர்னர் பொறுமையாக தனது உரையை வாசித்தார். தி.மு.க.வினர் அவர்களின் கட்சிக்கொள்கையை உரையில் எழுதி அதை படிக்க வைக்க வேண்டும். அவர் வாயால் 'திராவிட மாடல்' என சொல்ல வைக்க நினைத்தார்கள். ஆளும் கட்சியினர் அவர்கள் தயாரித்த உரையை கவர்னருக்கு அனுப்பியுள்ளனர். அவர் அந்த உரையை திருத்தம் செய்து அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இவர்கள் பதில் சொல்லவில்லை.

கவர்னர் தனது பதவியின் மாண்பை பாதுகாத்துள்ளார். அவரை வைத்துக்கொண்டே கண்டன தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்துள்ளனர். இதனால் கவர்னர் வெளிநடப்பு செய்துள்ளார். இது அதிசயம். வரலாற்றில் முதல் முறையாக கவர்னர் வெளிநடப்பு செய்துள்ளார். இது தமிழகத்தில் அரசியல் சாசனம் செத்துவிட்டது என்பதை கவர்னர் உணர்த்தியுள்ளார்.

டிஸ்மிஸ் 'தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் முயற்சிக்க வேண்டும்''தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் முயற்சிக்க வேண்டும்''தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் முயற்சிக்க வேண்டும்''தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் முயற்சிக்க வேண்டும்'செய்ய வேண்டும்

தமிழக சட்டசபையை அரசியல் சாசன பிரிவு 365-ஐ பயன்படுத்தி முடக்கி வைக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு சீர்குலைவு, பிரிவினைவாத, பயங்கரவாத ஆதரவு, கவர்னர் உயிருக்கு, உடமைக்கு ஆபத்து ஏற்படுத்துவது, மத்திய அரசுக்கு போட்டி அரசாங்கம் நடத்துவது போன்றவற்றால் அரசியல் சாசன பிரிவு 356-ஐ பயன்படுத்தி இந்த ஆட்சியை, தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதற்குண்டான முயற்சியை கவர்னர் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு அவர் கூறினார்.


Next Story