திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
ஊதிரம்பூண்டி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
திருவண்ணாமலை
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஊதிரம்பூண்டி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் 73-ம் ஆண்டு மகாபாரத சொற்பொழிவு கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
7 நாட்கள் மகாபாரதம் குறித்து தெருக்கூத்து நாடகங்கள் நடைபெற்றன. நேற்று காலையில் கோவில் அருகில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமித்தது நேர்த்திக்கடன் செலுத்தினார்.
தொடர்ந்து இன்று ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஊதிரம்பூண்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story