அன்னவாசல் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


அன்னவாசல் அருகே  திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

அன்னவாசல் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள வாதிரிப்பட்டியில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 1-ந்தேதி இரவு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி திரவுபதி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் சத்திரத்தில் உள்ள குளத்தில் புனித நீராடி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.


Next Story