திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

பெண்ணாடம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே வடகரை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து கோவிலில் தினசரி சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது. மேலும் இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது.

இதற்கிடையே கடந்த 11-ந் தேதி தீமிதி திருவிழா நடக்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக தீமிதி திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டு, 14-ந் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை வடகரையில் உள்ள காடான்குளத்தில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது.

நேர்த்திக்கடன்

அதனை தொடர்ந்து கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story