காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர்.

காமாட்சி அம்மன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கருவாழக்கரை கிராமத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும், திருமணம் தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், மனக்கவலைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கி நலம் பெற்று வாழ்வில் வளம் பெறும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இப்படி பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் வைகாசி மாதம் பெருவிழா கடந்த மாதம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சாமி வீதியுலா சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று வந்தது.

தீமிதி திருவிழா

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டம் எதிரில் அம்மன் எழுந்தருளி காட்சியளிக்க காவேரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு வர விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதற்ககான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.


Next Story