கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மேலவாஞ்சூர் கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் காட்டுநாயக்கன் தெருவில் கருமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி ருத்ரா அபிஷேகமும், அதை தொடர்ந்து பூச்சொரிதலும், 6-ந்தேதி காப்பு கட்டுதலும், 12-ந்தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பக்தர்கள் காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். இதை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story