மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி மகா மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி மகா மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மகா மாரியம்மன் கோவில்

திருத்துறைப்பூண்டியில் மானைக்கால் மகா மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.

தீமிதி திருவிழா

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக மாவிளக்கு போடுதல், அர்ச்சனை செய்தல், முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாலையில் கோவில் எதிரே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அம்மன் வீதி உலா

இதையடுத்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story