மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருமருகல் மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
நாகப்பட்டினம்
:திட்டச்சேரி
நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு பூச்சொரிதல், கஞ்சி வார்த்தலுடன் தொடங்கி சிறப்பு பூஜை, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story