மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

மகாராஜபுரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:

திருப்பனந்தாளை அடுத்த சோழபுரம் அருகே மகாராஜபுரத்தில் உள்ள ஜோதி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் இரவு ஜோதி மாரியம்மன், கருப்புசாமி, காத்தவராயன், சுவாமிகள் மண்டகப்படி மற்றும் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடந்தது. இதில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story