சீர்காழி பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
சீர்காழி பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா6-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்று வருகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை பால் காவடி, அலகு காவடி, பறவை காவடி, பால்குடங்களுடன் கரகம் வீதி உலாவும், இரவு பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலாவும், இரவு 9 மணி அளவில் கோவிலின் முன்பு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவில் 4-ந்தேதி விடையாற்றி உற்சவமும், 5-ந்தேதி மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சியும், 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story