வல்லம் ஏகவுரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


வல்லம் ஏகவுரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

ஆடி கடைசி வெள்ளியையொட்டி வல்லம் ஏகவுரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தஞ்சாவூர்

வல்லம்:

ஆடி கடைசி வெள்ளியையொட்டி வல்லம் ஏகவுரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீமிதி திருவிழா

தஞ்சை அருகே வல்லம் ஏகவுரி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக காலையில் வல்லம் கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் வல்லம் வஜ்ஜிரதீர்த்த குளத்தில் இருந்து பால்குடம், செடில்காவடி, பறவை காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

இதையடுத்து கோவிலில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அதேபோல் சுகாதார பணிகளை வல்லம் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன் தலைமையில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story