பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
x

புகாா் பெட்டி

ஈரோடு

சேதமடைந்த அடிபம்பு

ஈரோடு அருகே நசியனூர் சாமிகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அடிபம்பு பழுதடைந்துள்ளது. அதிலிருந்து விஷ ஜந்துக்கள் வெளியே வருகின்றன. இதனால் தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே அடிபம்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபால் பிரேமா, நசியனூர்.

பஸ் இயக்க வேண்டும்

அந்தியூரில் இருந்து காட்டூர், பாட்டப்பன்கோவில், பருவாச்சி வழியாக அம்மன்பாளையம், ஒலகடம் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் கடந்த ஆண்டு முதல் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்தியூர், பவானி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பஸ்சில் சென்று வருகின்றனர். எனவே அந்தியூரில் இருந்து பவானிக்கு ஒலகடம், அம்மன்பாளையம் வழியாக தினமும் காலை, மாலை வேளைகளில் டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அம்மன்பாளையம்.

சீரமைப்பார்களா?

கோபியில் வாஸ்து நகருக்கு அருகில் பெருமாள் சாமி நகர் உள்ளது. அங்கு ரோடு குண்டும், குழியுமாக இருக்கிறது. அதில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெருமாள்சாமி நகரில் ரோட்டை சீரமைப்பார்களா?

நாதன், கோபி.

சுத்தம் செய்யவேண்டும்

கோபி சக்தி சாந்தி நகரில் உள்ள கிருஷ்ணன் வீதியில் ஓர் இடத்தில் ரோட்டு ஓரம் செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. அதில் மழை நீரும் தேங்கியுள்ளது. இதனால் அங்கிருந்து பாம்பு, தவளை உள்ளிட்டவைகள் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் வந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிருஷ்ணன் வீதியில் உள்ள புதரை சுத்தம் செய்யவேண்டும்.

பொதுமக்கள், கிருஷ்ணன் வீதி.

வீணாகும் குடிநீர்

புஞ்சைத்துறையம்பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் உப்புப்பள்ளம் பகுதியில் உள்ள ஆழ்துளை குழாயில் ஏற்பட்ட பழுதால் வீணாக தண்ணீர் வெளியேறி வருகிறது. உடனே குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பங்களாப்புதூர்

போக்குவரத்துக்கு இடையூறு

அந்தியூர் அருகே வேம்பத்தி முனியப்பன்பாளையத்தில் இருந்து குப்பாண்டபாளையம் கிராமம் கருவல்வாடிப்புதூர் வரையுள்ள ரோடு குறுகியதாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. உடனே ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வேம்பத்தி குப்பாண்டபாளையம்.

ஆபத்தான மின்கம்பம்

கோபி மொடச்சூர் சந்தை அருகே மில்ரோட்டையும், தேர் வீதியையும் இணைக்கும் சந்தில் மின்கம்பம் உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டு்மானாலும் மின்கம்பம் கீழே சாய்ந்து பேராபத்து ஏற்படலாம். ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின்கம்பத்தை உடனே மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மொடச்சூர்


Next Story