பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
தினத்தந்தி புகாா் பெட்டி
வீணாகும் குடிநீர்
ஈரோடு காளைமாட்டுச்சிலை அருகில் உள்ள எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தண்ணீர் அதிக நாட்களாக செல்வதால் அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
நாய்கள் தொல்லை
டி.என்.பாளையம் ஒன்றியம் கொங்கர்பாளையம் 4-வது வார்டு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் அந்த பகுதி வழியாக நடந்து செல்பவர்களை துரத்தி கடிப்பதுடன், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துகின்றன. எனவே பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொங்கர்பாளையம்.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபி நகரின் மத்திய பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் குவிந்து உள்ள இடத்தின் அருகே மின் மாற்றி உள்ளது. மின் மாற்றியில் தீப்பொறி ஏற்பட்டு அது குப்பையில் விழுந்தால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
பூங்கா பராமரிக்கப்படுமா?
கோபி வாஸ்து நகரில் உள்ள நகராட்சி பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த பூங்காவுக்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை வந்து செல்கிறார்கள். புதர் மண்டி கிடப்பதால் பூங்காைவ பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே பூங்காவை பராமரிப்பதுடன், விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
ரோடு சீரமைக்கப்படுமா?
கோபி டவுனில் வாய்க்கால் ரோட்டுக்கு செல்லும் ரோட்டில் இடது புறமாக கடைவீதிக்குச் செல்லும் சாலை செல்கிறது. அந்த ரோட்டில் ஒரு கோவில் அருகில் ரோடு பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே பழுதடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும்.
பொதுமக்கள், கோபி.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சென்னிமலையில் இருந்து வெள்ளோடு, கனகபுரம், முள்ளாம்பரப்பு வழியாக ஈரோட்டுக்கு 2 தனியார் டவுன் பஸ்களும், பெருந்துறையில் இருந்து மேற்கண்ட வழித்தடத்தில் ஒரு அரசு டவுன் பஸ்சும் என 3 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா 2-வது அலைக்கு பின்னர் அரசு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கனகபுரம்.