பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
x

புகாா் பெட்டி

ஈரோடு

நாய்கள் தொல்லை

அந்தியூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு ரோட்டில் ஓடுகின்றன. அப்படி ஓடும் நாய்கள் ரோட்டில் செல்லும் இரு சக்கர வாகனங்களின் குறுக்கே செல்கின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்படுகிறது. எனவே ரோட்டில் சுற்றித்திரிந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ெதால்லை கொடுக்கும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.

ஓடையில் கலக்கப்படும் கழிவுகள்

ஈரோட்டில் பெருந்துறை ரோடு செங்கோடம்பாளையம் அருகில் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் செப்டிக் டேங்க் கழிவுகளை சிலர் திறந்துவிடுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், செங்கோடம்பாளையம்.

தார் சாலை வேண்டும்

சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய சோளக்காளிபாளையத்தில் இருந்து சோளக்காளிபாளையம் வரை உள்ள 1 கிலோ மீட்டர் தார்சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் இந்த சாலை முழுவதிலும் உள்ள கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன்காரணமாக சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த தார் சாலையை சீரமைப்பதுடன், புதிதாக தார் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சோளக்காளிபாளையம்.

ரோடு சீரமைக்கப்படுமா?

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதி வில்லரசம்பட்டி. இங்குள்ள நால்ரோடு பகுதியில் சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த ரோடு வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே வில்லரசம்பட்டி நால்ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்குமரன், ஈரோடு.

கூடுதல் பஸ் வசதி

அந்தியூரில் இருந்து பர்கூர், ராமபுரம், கொள்ளேகால் வழியாக கா்நாடகா மாநிலம் மைசூருக்கு ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ் காலை 7.30 மணிக்கு சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் மைசூரூ செல்வதற்கு பஸ் கிடையாது. இதனால் மைசூரு செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி அந்தியூாில் இருந்து கூடுதலாக மைசூருக்கு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்


Next Story