தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 July 2023 11:39 PM IST (Updated: 10 July 2023 5:41 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், புறத்தாக்குடி -ஆலத்தூர் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சரிசெய்யப்படாத படிக்கட்டுகள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெரு அருகில் புள்ளம்பாடி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இறங்கி பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்தும் வகையில், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து பொதுமக்கள் கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புள்ளம்பாடி வாய்க்காலின் படிகட்டுகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாசன வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மாதவபெருமாள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரட்டைமண்டபம் அருகில் உள்ள அய்யன் வாய்க்காலில் இப்பகுதி மக்கள் கோழி கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாய்ந்த மின்கம்பம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் இனாம்புலியூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்த தற்போது மிகவும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை தாங்கி நிற்கும் வகையில் மரக்கட்டைகளை கொண்டு முட்டுக்கொடுத்துள்ளனர். தற்போது மழை காலம் என்பதால் பலத்த காற்று அடிக்கும்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் இப்பகுதியில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story