தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

போக்குவரத்திற்கு இடையூறு

ஜெயங்கொண்டம் நகரப்பகுதியில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவற்றால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிவக்குமார், ஜெயங்கொண்டம்.

புகார் பெட்டிக்கு நன்றி

அாியலூர் மாவட்டம், தா.பழூர் பஸ் நிறுத்தும் அருகே தோப்பேரி செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், தா.பழூர்.

கழிவறையின்றி சிரமப்படும் பெண்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்களில் பொதுக்கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஜெயங்கொண்டம் நகரப்பகுதியில் உள்ள முக்கியமான பஸ் நிறுத்தங்களில் பொதுக்கழிவறை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரோஸ்மேரி, ஜெயங்கொண்டம்.

குண்டும், குழியுமான சாலை

உடையார்பாளையம் அருகே பருக்கல் கிராமத்தில் இருந்து தத்தனூர் செல்லும் சாலை அமைக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆவதினால் தற்போது மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கார வாகனங்களில் செல்பவர்கள் இரவு நேரத்தில் இந்த சாலையில் பள்ளம் இருப்பது தெரியமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், பருக்கல்.


Next Story