தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

திறக்கப்படாத மகளிர் சுகாதார வளாகம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், நமையூர் கிராமத்தில் நமையூர் கிழக்கு காலனி பகுதியில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு பெண்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நமையூர்.

நோய் தொற்று பரவும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஒதியம் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் சுகாதாரமற்ற வகையில் குப்பை கூலங்கள், கருவேல மரங்கள் உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் தொந்தரவாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஓதியம்.


Next Story