தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் கிராமம், மேலத்தெருவில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 40 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் உள்ளிட்ட தங்களின் அன்றாட தேவைக்கு குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீழக்கொளத்தூர், அரியலூர்.


Next Story