தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாநகராட்சி ராமகிருஷ்ண நகர் செட்டியாபட்டி மெயின் ரோடு ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மினகம்பம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், ராமகிருஷ்ணநகர், திருச்சி.
ஆபத்தான புளியமரம்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் ஊராட்சி திருச்சி- துறையூர் சாலையோரத்தில் உள்ள புளியமரம் ஒன்று மரத்தின் அடிப்பகுதியில் பட்டுப்போய் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. சாலையில் வாகனங்கள் செல்லும்போது இந்த புளியமரம் முறிந்து விழுந்தால் விபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த புளியமரத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாரத், புலிவலம், திருச்சி.