தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் நகரத்திற்கு உட்பட்ட சாலையோரத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடையின் உரிமையாளர்கள் தங்களின் கடைக்கு வெளியே தங்கள் கடையின் விளம்பர பலகை உள்ளிட்டவைகளை வைத்து நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர்.


Next Story