தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

சுகாதாரமற்ற கழிவறை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அவர்களின் தேவைக்காக பஸ் நிலையத்தில் இலவச கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறையானது பராமரிப்பு இன்றி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குமரன், பெரம்பலூர்.


Next Story