தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

இருண்டு கிடக்கும் திருமணஞ்சேரி சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கிராமத்தில் புகழ்மிக்க சுகந்த பரிமளேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கிராமத்தை சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கறம்பக்குடி திருமணஞ்சேரி விலக்கு சாலையில் இருந்து திருமணஞ்சேரி கோவில் வரை தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் இந்த சாலை இருண்டு காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், அப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். திருடர்கள் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டமும் அதிகம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேதுமாதவன், சுக்கிரன் விடுதி, புதுக்கோட்டை.

பூங்காவை மேம்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை நகராட்சி அண்ணாசிலை அருகே அமைக்கப்பட்டுள்ள காந்தி பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்கின்றனர். கூட்டம் அதிகமாக வரும்போது அவர்களுக்கு போதிய இருக்கைகள் இல்லாமலும், அவர்கள் விளையாட போதிய உபகரணங்கள் இல்லாமலும் பெரிதும் அவதிப்படுகின்றனர். குழந்தைகளை மகிழ்விக்க மேலும் பல சிறப்பு அம்சங்களை நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.


Next Story