தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
காத்தவராயன், ஜெயங்கொண்டம், அரியலூர்.
Related Tags :
Next Story