தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை ஊராட்சி பழங்காவேரி குடியிருப்பு பகுதியில் உயர்அழுத்த மின் கம்பிகள் செல்லும் மின் கம்பமானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கரும்பாசலம் பெருமாள், பெட்டவாய்த்தலை.
குழாய் சரிசெய்யப்படுமா?
திருச்சி மாவட்டம், தி௫வெறும்பூர் பகுதியில் உள்ள தெற்கு இந்திரா நகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. இதனால் குடிநீர் வரும்போது அவ்வப்போது வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சங்கரன், திருவெறும்பூர்.
பன்றிகளால் நோய் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் பாலாஜி நகர் பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பன்றிகள் சாலையோரங்களில் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை கிளறுவதனால் அவற்றிலிருந்து துர்நாற்றம் வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பாலாஜிநகர்.