தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாமதமாக நடக்கும் பாலம் கட்டும் பணி
அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 42 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் கூடிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மேலும் இதனருகே ரேஷன் கடை மற்றும் கிராமப்புற நூலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் வழி பாதை கப்பி சாலை என்பதால் மாணவர்களின் நலன் கருதி மெயின் ரோட்டில் இருந்து பள்ளி செல்லும் நுழைவுவாயில் வரை சிறிய தரைப்பாலம் ஒன்று அமைக்கும் பணியும், மேலும் சிமெண்டு சாலை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டு மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ரெட்டிபாளையம்.