தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வடிகால் வசதி அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கடைவீதியில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. அப்போது தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து உடையார்பாளையம் கடைவீதியில் இருபுறமும் வடிகால் வசதி அமைத்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வியாபாரிகள், உடையார்பாளையம்.
வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்
அரியலூர்-தஞ்சாவூர் மாவட்டத்தை இணைப்பதில் பெருபங்கு வகிக்கிறது திருமானூர் கொள்ளிடம் பாலம். தற்போது மேட்டூர் அணை நிரம்பியதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்ளிடம் பாலத்தில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகள் பயத்துடனேயே பாலத்தில் நலந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இளவரசன், கல்லூர்.
ஒற்றுமைதிடலை சீரமைக்க வலியுறுத்தல்
அரியலூரில் ஒற்றுமை திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றுமை திடலில் தான் அரசு விழாக்கள் உள்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த திடலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் உடைந்து காணப்படுவதினால் இப்பகுதியில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ஒற்றுமை திடலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய அரிஜனகாலனி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவை இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இக்காலனிக்கு பெயர் பலகை வைக்கப்படாமல் உள்ளதால் வெளியூரில் இருந்து வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரிஜனகாலனி.
பழைய மின்மாற்றியால் தொடரும் மின் வெட்டு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கீழத்தெரு மற்றும் வேலாயுதநகர் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வேலாயுத நகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள பழைய மின்மாற்றியை மாற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மின்மாற்றி மாற்றாததால் வேலாயுதநகர் 3-வது மற்றும் 4-வது குறுக்குத்தெருவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய மின் மாற்றி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வேலாயுதநகர்.