தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

சாலையில் பள்ளம்

அரியலூரிலிருந்து கல்லங்குறிச்சி, தேளூர், காத்தான்குடிகாடு வழியாக இரும்புலிக்குறிச்சி வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராம தார்சாலை வழியாக அரசு பஸ்களும், மினி பஸ்களும் சென்று வருகின்றன. இந்த நிலையில் காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி அருகே தார் சாலையில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் வெளியூர் வாசிகள் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிககை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அரியலூர் பெரியார் நகர் முதல் தெரு கிழக்குப்பகுதியில் உள்ள சாக்கடையில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய் அளவு சிறியதாக உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து அதிக அளவில் ஓடுவதினால், இந்த குழாயில் செல்ல முடியாமல் சாலையில் சென்று தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு இடையூறு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் நகரம் 4 ரோட்டில் பகல், இரவு நேரங்களில் ஆடு, மாடுகள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் முழுவதும் சாலையில் செல்வதால் சாலையில் அரிப்பு ஏற்படுவதால், இரவு நேரங்களில் முதியவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்பால் தாமதமாகும் சாலை பணி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், நாச்சியார்பேட்டையில் இருந்து ஆதிச்சனூர், சுத்தமல்லி மற்றும் தா.பழூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை இணைப்பு சாலை ஆகும். இந்த மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல் உள்ளதால் சாலை விரிவாக்க பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story