தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் மேம்பாலம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பாடாலூர்.
சீரமைக்கப்படாத சுகாதார வளாகங்கள்
பெரம்பலூர் நகராட்சியில் பல்வேறு இடங்களில் உள்ள சுகாதார வளாகங்கள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து வருகிறது. இதனால் வீட்டில் கழிவறை வசதி இல்லாத பொதுமக்கள் சுகாதார வளாகங்களை பயன்படுத்த முடியாமல் திறந்த வெளியை பயன்படுத்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள சுகாதார வளாகங்களை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
, பொதுமக்கள், பெரம்பலூர்.
போக்குவரத்திற்கு இடையூறு
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தையொட்டி நகராட்சி அலுவலகம் உள்ளது. இதே வளாகத்தில் அம்மா உணவகமும் உள்ளது. நகராட்சி அலுவலக சுற்றுச்சுவரையொட்டி இரவு நேர அசைவ உணவுகளை விற்கும் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இரவு நேரங்களில் அசைவ உணவுகளை விரும்பி வாங்க வருவோர் புதிய பஸ் நிலையம்-நான்குரோடு சந்திப்பு பிரதான சாலையை அடைத்தவாறு தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
தெருநாய்களால் அச்சம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றுத்திரிகின்றன. இவை இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். மேலும் சிறுவர், சிறுமிகளை கடிக்க வருகிறது. இதனால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வேப்பந்தட்டை.
முட்புதரான கிரிக்கெட் மைதானம்
பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசுக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. அந்த கிரிக்கெட் மைதானம் தற்போது முட்புதர் மண்டி மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அதில் இளைஞர்கள் சிரமத்துடன் விளையாடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
காயத்ரி, பெரம்பலூர்.