தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

வாகன ஓட்டிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு முக்கம், அரசமரம், காமராஜர் சிலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றன. சில வாகன ஓட்டிகள் அவ்வப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் கா.சத்திரம் சந்திப்பில் உள்ள நிழற்குடை பாழடைந்து கூறைகளின்றி உள்ளது. நுற்றுக்கணக்கான பஸ்கள் நின்று செல்லும் பிரதான பஸ் நிறுத்தமாகும், பயணிகள் அதிகம் வரக்கூடிய இடமாகும். ஆனால் நிழற்குடை சேதமடைந்து கேட்பாரற்று உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்களால் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள அக்கச்சிப்பட்டி ஊராட்சியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் நாய்கள் கால்நடைகளையும், கோழிகளையும் கடித்து விடுவதால் கால்நடை வளர்ப்போர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

புதுக்கோட்டை தாலுகா, பெருங்களூரில் தபால் நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 அலுவலகங்களுக்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகங்களை சுற்றி செடி, கொடிகள் அதிக அளவில் முளைத்து காடுபோல் உள்ளதால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார் சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், காரமங்கலம் ஊராட்சி கே.புதுப்பட்டியில் இருந்து பாப்பான்பட்டி தெற்கு தெரு மயானத்திற்கு செல்லும் சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. தற்போது அந்த சாலை ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story