தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காமராஜர்நகர் பகுதியிலிருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் டைமண்ட் நகர் உள்ளது. இங்கு சுமார் 50க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்பவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலை ஓரத்திலேயே கொட்டி விடுகின்றனர். மேலும் டைமண்ட் நகர் அருகிலேயே கடைகள் அதிகமாக உள்ளது. இதனால் கடைகளில் உள்ள கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளையும் இங்கு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். நீண்ட நாட்களாக இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றாததால் அந்த இடம் குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. மேலும் இங்கு கழிவு நீர் செல்ல முறையாக வாய்க்கால் அமைக்காததால் மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் சாலையின் ஓரத்திலேயே தேங்கி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்வதோடு குப்பைகளை மிதித்துக்கொண்டு செல்லும் நிலைமைக்கு உள்ளாகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கி இருக்கும் இடத்திற்கு மிக அருகில

குண்டும், குழியுமான தார்சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் இருந்து வடகாடு செல்லும் தார் சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போதே சாலை தரமில்லை என்ற புகார் எழுந்தது. அதிகாரிகளும், ஒப்பந்தக்காரரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்குள்ளேயே தார் சாலை முழுமையாக உடைந்து போக்குவரத்திற்கு இடையூறாக குண்டும், குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே சென்று வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்து நெரிசல்

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள் என இருபுறமும் ஒரே நேரத்தில் செல்லும்போது வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். இதில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதருக்குள் மறைந்திருக்கும் குடிநீர் தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், பணம்பட்டி ஊராட்சி மருந்தாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட குடிநீர் தொட்டியை சுற்றிலும் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முட்புதர்களை அகற்றி தண்ணீர் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை, வடிகால் வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, முல்லங்குறிச்சி ஊராட்சி கோட்டைக்காடு கிராமத்தில் முறையான சாலை, வடிகால் வசதி இல்லாததால் சிறிய அளவு மழை பெய்தாலும் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story