தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

பராமரிக்கப்படாத சிறுநீர் கழிப்பிடம்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆண், பெண் பயணிகளுக்கு வசதியாக இலவச சிறுநீர் கழிப்பிடம் தனித்தனியாக உள்ளது. ஆனால் அந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க நடவடிககை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நாய்கள் தொல்லை

பெரம்பலூர்-வடக்கு மாதவி செல்லும் சாலையில் நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு வாகன ஓட்டிகள், சிறுவர்கள், கால்நடைகளை தூரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்வோர்கள் நாய்களுக்கு பயந்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மருத்துவ முகாம் அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், கொட்டரை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குளமாக மாறிய தார்சாலை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆதனால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைபெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் இருப்பதால் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக குளம்போல் காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான நிலையில் உள்ள டவர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகன்பூர் கிராமத்தில் கடந்த 2008-ம் ஆண்டில் பயன்பாட்டில் இல்லாத மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பி.எஸ்.என்.எல். டவர் அடிப்பகுதி துருப்பிடித்து எப்போது விழும் என்று தெரியாமல் இருக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கிறது இந்த பி.எஸ்.என்.எல். டவர் கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் அந்தத்துறை சார்ந்த அதிகாரிகள் டவரை அகற்ற முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story