தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் தெரு நாய்கள்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டுகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோய்பரப்பும் காய்கறி மார்க்கெட் கழிவுகள்

பெரம்பலூரில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் காய்கறி கழிவுகள் கிளை சிறைச்சாலை மார்க்கெட் இடையே உள்ள சந்து பகுதியில் தினந்தோறும் கொட்டப்படுகின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அகற்றி தூய்மை செய்யாததால் தற்போது பெய்துள்ள மழை காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் போக்குவரத்துக்கு தடையாகவும் உள்ளது.நோய் பரப்பும் நிலையில் உள்ள தினசரி மார்க்கெட் காய்கறி கழிவுகளை நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குப்பைகளை அள்ள வேண்டும்

பெரம்பலூர் நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட சாமியப்பா நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள வீடுகளில் முறையாக குப்பைகள் சேகரிக்கப்படுவதில்லை. இதனால் அந்த தெரு ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதனையும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அள்ளப்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அள்ளுவதற்கும், தினசரி வீடுகளில் குப்பைகளை சேகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வடிகால்கள் ஆக்கிரமிப்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சி கோவில்பாளையம் அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கனமழை பெய்யும்போது இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட துங்கபுரம் ஊராட்சி அண்ணாநகர் 7-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தும்போது அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story