தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தூர்வாரப்படாத உபரிநீர் கால்வாய்

கரூர் மாவட்டம், பேச்சிப்பாறை பகுதியில் இருந்து கோம்புப்பாளையம் வழியாக செல்லும் புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரிநீர் கால்வாய் வெட்டப்பட்டது. உபரி நீர் கால்வாயையொட்டி உள்ள விவசாயத் தோட்டங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் ஆகியவை இந்த கால்வாய் வழியாக சென்று கோம்புப்பாளையம் புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் நடையனூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளியையொட்டி இந்த உபரி நீர் கால்வாய் செல்கிறது. இந்த உபரி நீர் கால்வாயில் நெடுகிலும் நாணல் தட்டு மற்றும் பல்வேறு வகையான செடிகள் முளைத்து வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்த கால்வாய் வழியாக உபரி நீர் மற்றும் மழை நீர் வேகமாக செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிறிய பாலத்தை அகலப்படுத்த கோரிக்கை

கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிதான பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சென்று வருகின்றனர். இந்த குறுகிய பாலத்தை அகலப்படுத்தி தரமான பாலமாக கட்டித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால் இதுவரை பாலத்தை அகலப்படுத்தி கட்டி தரவில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புகழூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை அகலப்படுத்தி தரமான பாலமாக கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையிலிருந்து கோம்புப்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் இருந்து செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனத்தை ஒட்டி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அனுமதி பெறாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கரூர் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியின் அனுமதி பெறாமல், கட்டிட வரைவு படம் ஒப்புதல் இல்லாமல் ஏராளமான வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். அதை வாங்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை வாங்கிய பிறகு கட்டிட அளவு குறித்த வரைபடங்கள் தயார் செய்து அதற்குப் பிறகு கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிகளின்படி கட்டிடம் கட்டுவதற்கு முன்( ப்ளூ பிரிண்ட்) வீட்டு கட்டிடத்தின் அளவு, அறைகளின் அளவு குறித்த வரைபடம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட பிறகு அதிகாரியின் ஒப்புதல் பெறப்பட்டு அந்த வீட்டின் அளவு எத்தனை சதுர அடி உள்ளதோ அதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பணம் கட்டி ரசீது பெற்ற பிறகு வீடுகள் கட்ட வேண்டும் என்பது விதி உள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் எந்த அனுமதியும் பெறாமல் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். வீடுகளை விற்பனை செய்யும் போது அனைத்து அனுமதியும் பெற்றுள்ளதாக கூறு

மாற்றப்படாத மின்கம்பிகள்

கரூர் மாவட்டம், வெள்ளியணை தென்பாகம், ஜல்லிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் மின் கம்பம் சிதிலமடைந்து கீழே விழும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் இந்த கம்பத்தின் அருகே புதிய மின் கம்பம் நடப்பட்டு கிட்ட தட்ட 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் மின்கம்பிகள் மாற்றப்படாமல் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story