தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆபத்தான நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒடப்பவிடுதியில் பயணிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. ஒடப்பவிடுதி, மணமடை, திருப்பக் கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். அருகில் நிழல்தரும் மரங்களோ வேறு கட்டிடங்களே இல்லாததால் இந்த நிழற்குடை அப்பகுதி கிராம மக்களின் அத்யாவசிய தேவையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த நிழற்குடையின் சுற்றுசுவர்கள், மேற்கூரை என இடிந்து கொட்டிய வண்ணம் உள்ளது. இதனால் இங்கு நிற்கவே பொதுமக்கள் அச்சபடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தண்ணீர் இன்றி மக்கள் அவதி

புதுக்கோட்டை விடுதி யாதவ தெருவில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்குத்தொண்டைமான் ஊரணியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் தற்போது பயன்பாட்டிலும் உள்ளது. . மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் அருகே அங்கன்வாடி மையம், அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெயர் பலகையின்றி செல்லும் பஸ்கள்

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி வழியே செல்லும் அரசு நகர மற்றும் புறநகர பஸ்கள் முக்கண்ணாமலைப்பட்டி வழி செல்லும் என பெயர் பலகையின்றி செல்வதால் முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் பயணிகள் கண்டக்டர், டிரைவரிடம் கேட்டு பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story