தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்
திருச்சி மாநகராட்சி கருமண்டபம் செல்வநகர் 2-வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குப்பைகளுக்கு தீ வைப்பு
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வயர்லெஸ் சாலை ஸ்டார் நகர் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை வாகனம் மூலம் அகற்றாமல் குப்பைகளை குவித்து தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் புகை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மின்விளக்குகள் பொருத்தப்படுமா?
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் படி ஏறும் வழிக்கு அருகில் மேற்கு திசையில் பல்லவர் கால குடைவரைக் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாலை நேரங்களில் செல்லும்போது போதிய வெளிச்சம் இல்லாததால் அங்கு உள்ள சிலைகள் கண்ணுக்கு புலப்படுவதில்லை. மேலும் அதிசயமாக அனைத்து இறைவன் உருவங்களும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி மலைக்கோட்டையின் கீழ் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலுக்கு மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி மின்விளக்குகள் அமைத்துக் கொடுத்தால் பக்தர்கள் இரவு நேரங்களிலும் தரிசன வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பஸ் நிலைய நுழைவு இடத்தில் மிகப்பெரிய பள்ளமும், பஸ் நிலையத்தின் கடைசி பகுதியில் வளையுமிடத்தில் மிகப்பெரிய பள்ளமும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் டாக்டர் அழகப்பா தெருவும், மேலவிபூதி பிரகாரமும் சந்திக்கும் சாலையின் எதிர்புறம் குப்பைகள் கொட்டப்படுவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.